கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.8.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தடையை மீறி ஊர்வலம் செல்வோம்.வி.எச்.பி. அடாவடி. அரியானாவில் உச்சக்கட்ட பாதுகாப்பு. 24 கம்பெனி துணை ராணுவப் படை, 2000 காவல்துறையினர் குவிப்பு
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சிஏஜி அறிக்கையின்படி ஒன்றிய அரசுத் துறைகளில் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரதமர் மோடிக்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு அருகதை, யோக்கியதை உண்டா என திருவாரூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைத் தொழிற்சாலையை ம.பி.யில் பாஜக நடத்துகிறது என மல்லிகார்ஜூனா கார்கே கடும் கண்டனம்.
* தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடையே ஜாதி வேற்றுமை அகன்று நல்லிணக்கத்தோடு வாழ வழிமுறை கண்டறிய அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் நோக்கத்தை அரசு வரையறுத்து ஆணை வெளியீடு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால், ராஜஸ்தான் கோட்டாவில் நீட் பயிற்சி பெற்ற இரண்டு மாணவர்கள் தற்கொலை; கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய இருப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
* உ.பி.யில் காவல்துறை டிஜிபி, குற்றங்களைத் தடுக்க அமாவாசை நாட்களை கருத்தில் கொள்ளுமாறு கீழ்நிலை அதிகாரிகளுக்கு உத்தரவாம்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment