சென்னை,ஆக.18- பொதுமக் களுக்கு அநீதி இழைக்கும் ஆன் லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் வாதிட்டார்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (17.8.2023) நடந் தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘ஆன்லைனில் விளையாடுபவர்கள் யாரும் இந்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவில்லை. மாறாக ஆன்லைனில் இந்த சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள்தான் இந்த வழக்குகளைத் தொடர்ந்துள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தால் பல அப்பாவிகள் இதற்கு அடிமையாகி உயிரை மாய்த்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்கொலை சம்பவங்களைத் தடுக்கும் நோக் கிலேயே அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதித்து சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. இந்த சட்டத்தை உயர் நீதிமன்றமும் அங்கீகரித் துள்ளது. பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் இதுபோன்ற ஆன் லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்ய தமிழ்நாடு அரசுக்கு அனைத்துஅதிகாரமும் உள்ளது’’ என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞரான அமித் ஆனந்த் திவாரி, ‘‘ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் செயல் படுவதால் அவற்றை கண்காணிக்க முடியாது. நேரில் விளையாடுவ தற்கும், ஆன்லைனில் மறைமுகமாக விளையாடுவதற்கும் நிறைய வித்தி யாசங்கள் மட்டுமல்ல, அடிப் படையே தவறானது. இதுபோன்ற ஆன்லைன் நிறுவனங்களை ஒரு போதும் ஒழுங்குபடுத்த முடியாது என்பதால்தான் இந்த தடைச்சட் டமே கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் இந்த ஆன் லைன் நிறுவனங்கள் ரூ.900 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள் ளன’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘ரம்மியை திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடுஅரசின் சட்டம் ரம்மியை நல்வாய்ப்புக்கான சூதாட்ட விளையாட்டாக எப்படி வகைப்படுத்தியது’’ என்றார்.
அதற்கு பதிலளித்த தலைமை வழக்குரைஞர், ‘‘நேரடியாக விளை யாடும்போது மட்டுமே ரம்மி, திறமைக்கான விளையாட்டு. அதை எதிரே இருப்பவர் யார் எனத் தெரியாமல் மென்பொரு ளால் வடிவமைக்கப்பட்ட இயந் திரத்துடன் ஆன்லைனில் விளை யாடும்போது அது சூதாட்டமே’’ என்றார்.
இதேபோல ஆன்லைன் நிறு வனங்கள் தரப்பில் மூத்த வழக் குரைஞர்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது தலைமை நீதிபதி, ‘‘ஆன்லைனில் ரம்மி விளையாட கட்டணமாக எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது?’’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆன்லைன் விளை யாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சதீஷ்பராசரன், ‘‘ஆன்லைனில் ரம்மி விளையாட பந்தயமாக செலுத்தப் படும் மொத்த தொகையில் 10 முதல் 15 சதவீதம் கட்டணமாக வெற்றி பெற்றவரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஆக.21ஆ-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment