குஜராத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

குஜராத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி

அகமதாபாத் ஆக 08 எதிர் வரும் மக்களவை தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட் டியிடும் என்றும், இந்த முறை 26 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்றும் அம்மாநில ஆம் ஆத்மி தலை வர் இசுதன் காத்வி தெரிவித்தார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட்டியிடும் என்று குஜராத் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இது தொடர்பாக குஜராத் ஆம் ஆத்மி தலைவர் இசுதன் காத்வி கூறியதாவது:  ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இரண்டும் அய்.என்.டி.அய்.ஏ. கூட்டணியில் அங்கம் வகிக் கின்றன. இந்த தேர்தல் கூட்டணி குஜராத்திலும் அமல்படுத்தப்படும். கூட்டணி குறித்த  பேச்சுக்கள் இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சியும், காங் கிரசும் எதிர்வரும் மக்களவை தேர்தலில் குஜராத்தில் சீட்-பகிர்வு பார்முலாவின் கீழ் போட்டியிடுவது உறுதி. 

ஆம் ஆத்மி

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், இந்த முறை குஜராத்தில் 26 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். 

எங்கள் கட்சி வேட் பாளர்களை நிறுத்து வதற்கான இடங்களை ஏற்க னவே ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆம் ஆத்மி தலைவர் இசுதன் காத்வி அறிவிப்பு குறித்து  காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் மணிஷ் தோஷி கூறுகையில், 

இந்த விஷயத்தில் எங்களது தேசிய தலைவர்களின் வழி காட்டுதல்களை குஜராத் காங்கிரஸ் பின்பற்றும் என்று தெரிவித்தார். 

No comments:

Post a Comment