பிரிவினைவாத விஷத்தின் விளைச்சல் இஸ்லாமிய மாணவனை அடிக்க இந்து மாணவர்களைத் தூண்டிய ஆசிரியை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 27, 2023

பிரிவினைவாத விஷத்தின் விளைச்சல் இஸ்லாமிய மாணவனை அடிக்க இந்து மாணவர்களைத் தூண்டிய ஆசிரியை!

லக்னோ, ஆக. 27-  7 வயதேயாகும் 2-ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவனை, ஆசிரியை ஒருவரே, மதத்தைக் குறிப்பிட்டு விமர்சித்த துடன், சக ஹிந்து மாணவர்களை வைத்து, முஸ்லிம் சிறுவனை மாறி மாறி அறையச் செய்யும் காட்சிப் பதிவு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் கண்டனங்களுக்கும் உள்ளா கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், மன் சூர்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட குப்பாபூர் கிராமத்தி லுள்ள ‘நேஹா பப்ளிக் ஸ்கூல்’ என்ற தனியார் பள்ளியை நடத்தி வருபவர் திராப்தி தியாகி. இவர் தான் ஒன்றுமறியாத பிஞ்சு  மாண வர்களின் மனத்தில் மதவெறி என்ற நஞ்சை கலக்கும், இந்த மோசமான காரியத்தைச் செய்துள் ளார்.

இணையதளங்களில் வெளி யான அந்த  காட்சிப் பதிவில், மாணவர்கள் தரையில் அமர்ந்தி ருக்கின்றனர். ஒரு மாணவர் மட் டும் ஆசிரியைக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். அவரை அடிக் குமாறு அந்த ஆசிரியை கூறுகிறார். உடனே, ஒரு மாணவர் வந்து, நின்று கொண்டிருந்த இஸ் லாமிய மாணவரின் கன்னத்தில் அடித்து விட்டு செல்கிறார். அவ ரைத் தொடர்ந்து, மேலும் இரண்டு  மாணவர்கள் கன்னத்தில் அறை கின்றனர். 

அப்போது, முஸ்லிம் சிறுவன் அழவே, “அப்கி பார் கமர் பே மாரோ... சலோ... முஹ் பே நா மாரோ அப்  முஹ் லால் ஹோ ரஹா ஹை... கமர் பே மாரோ சாரே (கன்னம் சிவந்து விட்டது.. எனவே, அவனை பின்பகு தியில் அடிக்கத் தொடங்குங்கள்...)” என்று கூறுகிறார். மேலும், “சலோ அவுர் கிஸ்கா நம்பர் ஹை (யாருடைய முறை)?” என்றும், அடுத்து யார் அடிக்க வேண்டும்.. என்றும் கேட்கிறார். 

ஒரு சிறுவன் அடிக்கும்போது, “க்யா தும் மார் ரஹே ஹோ? ஜோர் சே மாரோ நா? (நீங்கள் ஏன் அவனை இவ்வளவு லேசாக அடிக்கிறீர்கள்? கடுமையாக அடியுங்கள்)” என்றும் கூறுகிறார். தான் இவ்வாறு முஸ்லிம் சிறுவனை அடிக்கச் சொல்வதை, ஒருவர் படம் பிடிப்பதைப் பார்த்து விட்ட ஆசிரியை திராப்தி தியாகி, “மைனே தோஹ் டிக்ளேர் கர் தியா, ஜித்னே பி முகமதின் பச்சே ஹைன், இன்கே வஹன் சாலே ஜாவோ (நான் அறி விக்கிறேன் - இந்த முஸ்லிம் குழந்தை கள் எங்காவது சென்று விடுங்கள்)ஞ்” என்றும் கூறியுள்ளார். இந்த காட்சிப் பதிவு தற்போது சமூக வலைதங்களில் பரவியதையடுத்து, பல்வேறு தரப் பினரும் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். 

சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இது பா.ஜ.க. ஊற்றிய மண்ணெண்ணெய்தான் : ராகுல் காந்தி

மனதில் பிரிவினைவாதம் என்ற விஷத்தை விதைப்பது, அதுவும் பள்ளி எனும் 'புனித'மான இடத்தை வெறுப்பை வர்த்தகம் செய்யும் சந்தையாக மாற்றுவது என்பது ஒரு ஆசிரியர் செய்யக் கூடாத உச்சபட்ச இழி செயலாகும். இது பாஜக ஊற்றிய அதே மண் ணெண்ணெய்தான்.

இதைக் கொண்டுதான் நாட் டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பாஜக வெறுப்பைப் பரப்பியுள்ளது. குழந்தைகள்தான் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுக்கா தீர்கள். நாம் அவர்களுக்கு அன் பைப்  போதிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் தளத்தில் கண்டனம் தெரிவித்தார்.

காட்சிப் பதிவை  ஜி20 மாநாட்டில் போட்டுக் காட்டுங்கள் : அகிலேஷ்

“முசாபர் நகர் ஆசிரியர், இரட்டைக் குற்றத்தில் ஈடுபட் டுள்ளார். அவர் ஒருபுறம் மற்ற மாணவர்களைக் கொண்டு குழந் தையை அடிக்கச் சொல்லுகிறார், மறுபுறம் அவர்களை வன்முறையில் ஈடுபடுத்துகிறார். பாஜக அரசாங் கம் இந்த காட்சிப் பதிவை, ‘ஜி20’ கூட்டத்தில் காட்ட வேண்டும். 

மேலும், இப்படிப்பட்ட ஆசிரியர், ஆசிரியர் சமுதாயத்தின் மீதே படிந்த கறை. அவருக்கு எதிராக ஆசிரியர் சமுதாயம் குரல் எழுப்பி தண்டிக்க வேண்டும்’’ என்று உத்தரப் பிரதேச மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் கண்ட னம் தெரிவித்தார்.

இதேபோல எழுந்த கண்ட னங்களால், ஆசிரியை திராப்தி தியாகி மீது நடவடிக்கை எடுக்கு மாறு குழந்தை கள் உரிமைகள் அமைப்பு உத்தர விட்டது. 

இதையடுத்து காவல்துறையி னர் ஆசிரியை திராப்தி தியாகியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்கள், தங்கள் குழந்தை களின் கல்வியில் அக்கறை செலுத் தாததால்தான், இதுபோன்று அந்தச் சமூகச் சிறார்கள் கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள் என்ற அக்கறையிலேயே இவ்வாறு செய் ததாக ஆசிரியை கூறியதாக தெரிகிறது.

அத்துடன் நடந்த சம்பவத்திற்கு காவல் துறையினர் முன்பு அவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப் படுகிறது.  இதனிடையே, பாதிக்கப் பட்ட முஸ்லிம் சிறுவனின் தந்தை, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது புகார் அளிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. 

இதுகுறித்து பாதிக்கப் பட்ட சிறுவனின் தந்தை மிகுந்த மன வேதனையுடன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் என் குழந்தையை மீண்டும் அந்தப் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன். 

இந்த சம்பவம் பற்றி புகாரும் அளிக்க மாட்டேன். ஆசிரியர், குழந்தை களுக்கு இடையே பகையை உரு வாக்கியுள்ளார்” என்று மட்டும் கூறியுள்ளார். 

இதனிடையே, ஆசிரியை திராப்தி தியாகியின் செயலில், வகுப்புவாத எண்ணம் எதுவும் இல்லை என்று பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, மதவெறிச் செயலுக்கு வக்காலத்து வாங்கி யுள்ளார்.

No comments:

Post a Comment