இதுதான் பிஜேபியின் குஜராத் மாடலோ? பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் புற்றுநோய், காசநோய் பாதிப்பு அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

இதுதான் பிஜேபியின் குஜராத் மாடலோ? பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் புற்றுநோய், காசநோய் பாதிப்பு அதிகரிப்பு

புதுடில்லி, ஆக.1 குஜராத் மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக  ஆட்சிசெய்து வரும் நிலையில், அதிகளவிலான மக்கள் புற்று நோய் மற்றும் காச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.

இதுகுறித்து ஜூலை 28  அன்று மக்களவையில் பாஜக  உறுப்பினர் நிஹால் மேக்வால் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய சுகாதாரம்-குடும்ப  நலத்துறை அமைச்சகம் அளித்த புற்று நோயாளிகள் பற்றிய தகவல்களின் படி,  பாஜக நீண்ட காலம் ஆட்சி நடத்தி வரும்  குஜராத் மாநிலத்தின் உண்மை நிலவரம்  அம்பலமாகி யுள்ளது. குஜராத் மாநில  மக்களே புற்றுநோய் மற்றும் காச  நோயால்  அதிகளவில் பாதிக்கப்பட்டிருப் பது தெரிய வந்துள்ளது. 

குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த எண் ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில  ஆண்டு களாகவே புற்றுநோய் பாதிப்பு  அதிகரித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு  13,92,179 நபர்களும், 2021 ஆம் ஆண்டு 14,26,447 நபர்களும், 2022 ஆம் ஆண்டு   14,61,,427 நபர் களும் புற்றுநோயால் பாதிக்கப்பட் டனர். குஜராத்தில் மட்டும்  2020 ஆம் ஆண்டு  73,382 நபர்கள், 2021  ஆம் ஆண்டு  71,507 நபர்கள் மற்றும் 2021  ஆம் ஆண்டு  69,660 நபர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.  மேலும் அதிகளவு பாதிக்கப் பட்டது பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

இதே போல குஜராத் மாநி லத்தில் 2020 ஆம் ஆண்டு 1,20,560 நபர்கள் காச நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இந்த  எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு 1,51,912 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்த  ஆண்டில் இது வரை  60,585 நபர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டு 3,190 நபர்கள்  உயிரிழந்துள்ளனர்.மேலும் கடந்த ஏழு ஆண்டுகளாக 20 முதல் 40 வயதிற்குட்பட்ட இளை ஞர்களே புற்று நோயால் அதி களவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அபாயகரமான சூழல் நிலவு வதை காட்டுகிறது. 

மோசமான வாழ்க்கைச் சூழல், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகிய வையே அதிகளவிலான பாதிப் பிற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் இதற்கு பின்புலத்தில் அதிகப்படியான போதை பொருட்கள் பயன்பாடு இருக்கும் என்றும் கூறப்படு கிறது. ஏனெனில் வெளிநாடு களில் இருந்து  போதைப் பொருட்கள் இந்தியாவிற்கு  கடத்தி வரப்பட்டு, குஜராத்தில் அதானியின் முந்த்ரா துறை முகம் மூலமாக நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதாக பல்வேறு தரப்பினர் கூறுகின் றனர். அதிகள விலான ஆண்கள் வாய்ப்புற்று நோயாலும்  பாதிக்கப்பட்டுள் ளனர். புற்றுநோயாலும் காச நோயாலும் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டாலும் அவர் களுக்கு முறையாக மருத்துவ வசதிகள், மறுவாழ்வு மய்யங்கள் என  எதையும்  பாஜக அரசு செய்யவில்லை.  இந்த செய்திகள் மற்றும் ஒன்றிய அரசின் பதில்கள் மூலம் மக்களின் சுகாதா ரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாத பாஜகவின்  குஜராத் மாடல் லட்சணம் அம்பலமாகியுள்ளது.


No comments:

Post a Comment