எமது அடை­யா­ளத்தை அழித்து ஹிந்­தியை முன்­னி­றுத்­தும் பா.ஜ.க. முயற்சி உறு­தி­யோடு எதிர்க்கப்­ப­டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்­ச­ரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 13, 2023

எமது அடை­யா­ளத்தை அழித்து ஹிந்­தியை முன்­னி­றுத்­தும் பா.ஜ.க. முயற்சி உறு­தி­யோடு எதிர்க்கப்­ப­டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்­ச­ரிக்கை!



சென்னை, ஆக.13-எமது அடை­யா­ளத்தை அழித்து ஹிந்­தியை முன்­னி­றுத்­தும் பா.ஜ.க.வின் முயற்­சி­கள் உறு­தி­யோடு எதிர்க்­கப்­ப­டும் என தமிழ்­நாடு முதலமைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அறிக் கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:-

கால­னி­யாதிக்­கத்­தின் தளை­க­ளில் இருந்து விடு­விக்­கி­றோம் என்ற பெய­ரில் செய்­யப்­ப­டும் மறு கால­னி­யாக்­கம்.

பார­தீய நியாய சன்­ஹிதா, பார­தீய நாக­ரிக் சன்­ஹிதா, பார­தீய சாக்ஷ்ய சன்­ஹிதா என்ற பெயர்­க­ளில் ஒன்­றிய பா.ஜ.க அரசு ஒட்­டு­மொத்­த­மாக மாற்­றிக் கொண்­டு­வந்­துள்ள சட்ட வரை­வு­க­ளில் மொழியா­திக்­கத்­தின் முடை­நாற்­றம் எடுக்­கின்­றது.

இது இந்­தி­யா­வின் பன்­மு­கத்­தன்­மை­யைச் சிதைக்­கும் அரா­ஜக முயற்சி ஆகும். இந்­திய ஒற்று மையின் அடிப்­ப­டை­யையே இது அவ­ம­திக்­கி­றது. பார­தீய ஜனதா கட்­சிக்­கும் பிர­த­மர் நரேந்­திர மோடிக்­கும் இனித் ‘தமிழ்’ என்று உச்­ச­ரிக்­கக் கூட தார்­மீக உரிமை இல்லை.

வர­லாற்­றில் இப்­படி எத்­த­னையோ அடக்­கு­மு­றை­க­ளால் புடம் போ­டப்­பட்டு, அடக்­கு­முறைகளை எதிர்ப்­ப­தில் முன்­கள வீரர்­க­ளாக நிற்­ப­வை­தான் தமிழ்­நா­டும் - தி.மு.கழ­க­மும். ஹிந்தித் திணிப்பு எதிர்ப்­புப் போராட்­டங்­கள், எமது மொழி அடை­யா­ளத்­தைக் காப்­பது என ஹிந்தித் திணிப்­பின் கொடும்­பு­யலை எதிர்­கொண்­ட­வர்­கள் நாங்­கள். மீண்­டும் அசைக்­க ­மு­டி­யாத உறு­தி­யு­டன் அதனை எதிர்­கொள்­வோம்.

ஹிந்தி கால­னி­யாக்­கத்­துக்கு எதி­ரான தீ மீண்­டும் ஒரு­முறை பர­வு­கி­றது. எமது அடை­யா­ளத்தை அழித்து ஹிந்­தியை முன்­னி­றுத்­தும் பா.ஜ.க.வின் முயற்­சி­கள் உறு­தி­யோடு எதிர்க்­கப்­ப­டும்.

-இவ்­வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் விடுத்­துள்ள அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

No comments:

Post a Comment