உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு
சென்னை,ஆக.8- இணைய சூதாட்டத்துக்குத் தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டது.
இணைய சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று (7.8.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழ் நாட்டில் இணைய விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இணைய விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு என தெரிவிக்கப்பட்டது.
ரம்மியை நேரில் விளையாடும்போது தான் திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இணைய ரம்மி விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.
இணையத்தில் விளையாடுவோரின் சுய அறிவிப்பு (புரொஃபைல்) எவ்வாறு சரிபார்க்கப்படுகிறது என்று விளக்கப்பட வில்லை என தமிழ்நாடு அரசு வாதிட்டது.
மேலும், இணைய விளையாட்டில் வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது. ஒரு பகுதி நிறுவனத்துக்கு செல்கிறது. நேரடியாக விளை யாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இணைய சூதாட்ட தடை சட் டத்தை எதிர்த்த வழக்குகள் ஆக. 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment