சென்னை,ஆக.3 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை மேற்கோள்
காட்டி மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலாஸ் புளோரா அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெண்களால் முன்னேறக் கூடும் - நம் வண்தமிழ் நாடும் எந்நாடும்!
மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலாஸ் புளோரா அவர்களின் மகத் தான சாதனைக்குப் பாராட்டுகள். தமிழ் நாட்டில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக அவர் உயர்ந்திருப்பது சிறப்பான மைல்கல்லாகும். அவரது அபாரமான பணிக்கும், சேவைக்கும், ஆர்வத்துக்கும் எனது வணக்கங்கள்!
-இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment