மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் முதலமைச்சர் வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 14, 2023

மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை, ஆக.14 -  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- குரோம்பேட்டையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக் கிறது. நீட் தேர்வை நீக்க சட்ட ரீதீயான முயற்சியில் தமிழ் நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை மாணவர்களுக்கு வேண்டாம். மாணவர் ஜெகதீஸ்வரன் அவரது தந்தை செல்வ சேகர் ஆகியோர் மரணம் நீட் பலி பீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும். 

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண் டும். ஜெகதீஸ்வரன் போன்று எத்தனை உயிர்கள் பலிய னாலும் ஆளுநர் ரவி போன்றவர்களின் இதயம் கரையப் போவது இல்லை. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து காட்ட வேண்டும், பிறரை வாழ வைக்க வேண் டும். சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் பொல பொலவென உதிர்ந்துவிடும். நீட் விலக்கு மசோதா வுக்கு கையெழுத்து போடமாட்டேன் என்பவர்கள் காணாமல் போவார்கள். ஆளுநர் கையெழுத்துக்காக நீட் மசோதா காத்திருக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment