குறிப்பாக, உடல்நிலை காரண மாக கழக நிகழ்ச்சிகளுக்கு வர இயலாத மூத்த தோழர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். தந்தை பெரியார் பிறந்தநாள், தமிழர் தலைவர் பிறந்தநாள், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம், அதிலும் குறிப்பாக சொந்த வீடு வைத்திருப்பவர்கள் கட்டாயமாக கழகக் கொடி ஏற்றுவது, தங்கள் பகுதியின் முக்கிய பகுதிகளில் கழகக் கொடிக்கம்பங்கள் நடுவது, வாய்ப்புள்ள இடங்களில் கரும்பலகை வைத்து எழுதுவது, சுவரெழுத்துப் பிரச்சாரம் உள்ளிட்டவற்றை குறித்து கலந்துரையாடப் பட்டது.
முதற்கட்டமாக புரசை, ஓட் டேரி, அயன்புரம், முகப்பேர், வில்லிவாக்கம், ஜி.கே.எம். காலனி, கொளத்தூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஓட்டேரி சிட்டிபாபு, சேகர் - இளவரசி, முகப்பேர் பொறியாளர் சுந்தரராஜுலு, வில்லிவாக்கம் தங்க மணி குணசீலன், ஜி.கே.எம். காலனி அன்புச்செல்வன், கொளத்தூர் சுமதி - கணேசன், ப.கோபாலகிருஷ் ணன், வி.டெய்சி மணியம்மை, எருக்கமாநகர் சொ.அன்பு, பல்லவி, வடிவேலு- வெண்ணிலா, வியாசர்பாடி அமுதவள்ளி தணிகாசலம் மற்றும் கழகத் தோழர்களை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் சந்தித்து உரையாடினர்.
No comments:
Post a Comment