இசுலாமாபாத், ஆக. 11- பாகிஸ்தானில் தொடர்ந்து நிலவி வரும் பொரு ளாதார சிக்கல்கள் மற்றும் நிலையற்ற அரசியல் சூழல் ஏற் பட்டதால், அந்நாட்டு நாடாளு மன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2018இல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்தக் கட்சிக் கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. இதனால் அங்கு கூட் டணி ஆட்சி அமைந்தது.
பாகிஸ்தானில் அதிக இடங் களில் வெற்றி பெற்ற மேனாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட் டணி ஆட்சி அமைந்தது. இம் ரான்கான் 4 ஆண்டுகள் பிரதம ராக இருந்தார்.
இதற்கிடையே அவருக்கு வழங்கிய ஆதரவை கூட்டணிக் கட்சிகள் திரும்பப் பெற்றன. இதனால் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்து பிரதமர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ் தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி யின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இதையடுத்து இம்ரான்கான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட் டது.
நில முறைகேடு, கருவூல மோசடி தொடர்பான விசார ணைகள் தீவிரமாகின. இந்நிலை யில் தான் கருவூல மோசடி வழக்கில் இம்ரான் கானுக்கு சில நாட்களுக்கு முன்பு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட் டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையால் இம்ரான் கான் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் நாடா ளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், முன்கூட்டியே 9.8.2023 அன்று நள்ளிரவில் கலைக்கப்பட்டது.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையின் பேரில் நாடாளு மன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிப் ஆல்வி உத்தர விட்டார். மேலும், தேர்தல் நடத்தி முடிக்க 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ள அதி பர், அதுவரை காபந்து அரசை வழிநடத்த பிரதமரை தேர்வு செய்ய 3 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment