13.8.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉மோடி தாழ்வு மனப்பான்மையில் பேசுகிறார். மோடி எனும் பொருள் 2024இல் காலாவதி ஆகி விடும் என உத்தவ் தாக்கரே கருத்து.
👉தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடப் புத்தகங்களை உருவாக்குவதற்காக என்சிஇ ஆர்டி அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட புதிய குழுவில் இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் ஆகியோர் நியமனம்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
👉 பாஜகவே இந்தியாவை விட்டு வெளியேறு என்ற கோஷம் இந்தியா முழுவதும் எதிரொலிப்பதாக மம்தா பேச்சு.
👉 நீட் விலக்கு மசோதாவுக்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் - ஆளுநர் பிடிவாதம்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉"நீட் தேர்வு என்பது பயிற்சி மய்யங்களுக்கு செல விட்டால் மட்டுமே வெற்றி கிட்டும் என ஆளுநருடன் நடந்த ஆவேசமான விவாதத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவரின் தந்தை சேலம் அம்மாசியப்பன் ராமசாமி பதிலடி.
தி இந்து:
👉 மக்களவையில் பேச வேண்டாம் என்று அறிவுறுத் தப்பட்டதாக நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த மணிப்பூர் எம்.பி லோர்ஹோ எஸ்.பி.போஸ் பேட்டி.
தி டெலிகிராப்:
👉 வங்காள கிராமப்புற தேர்தல்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் (என்.எச்.ஆர்.சி) 'இந்தியா வின் சூப்பர் தேர்தல் ஆணையம்' போல் செயல்பட முடியாது என உச்சநீதிமன்றம் ஆணையத்திற்கு குட்டு.
👉வாரணாசியில் காந்திய சமூக சேவை அமைப்பின் 12 கட்டடங்களை புல்டோசர்கள் கொண்டு இடித்து யோகி தலைமை யிலான பாஜக அரசு தரைமட்டமாக்கியுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment