மதிப்பிற்குரிய திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களுக்கு, தமிழ் நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி பெருமைப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் மேம் பாட்டிற்காக, தொடர்ந்து எவ்வித தொய் வின்றி எண்பது ஆண்டுகளுக்கு மேலாக தொண்டறம் செய்திடும் தலைவருக்கு விருது வழங்குவதன் மூலம் தமிழ்நாடு அரசு ஆசிரியரின் நன்றிபாரா உழைப் பிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது கண்டு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.
மகிழ்ச்சியான இத்தருணத்தில், ஆசிரியர் அய்யா அவர்களுக்கு எங்கள் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறப்பான விருதினை தகுதி படைத்த தலைவருக்கு வழங்க முடிவு செய்த சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நன்றி.
வாழ்க ஆசிரியர். தொடர்க அவரது தொண்டறப் பணி.
கோ.கருணாநிதி
பொதுச் செயலாளர்,
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு
1.8.2023
No comments:
Post a Comment