கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.8.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மணிப்பூர் தீப்பற்றி எரியும் போது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிரிப்பது, கேலி செய்வது அழகல்ல என ராகுல்காந்தி கண்டனம்.
* தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் மசோதாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விலக்கி யிருப்பது ஜனநாயக மரபுக்கு எதிரானது என்கிறது தலை யங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* இந்திய குற்றச் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய மசோதாக்கள் அறிமுகம். பெயர்கள் ஹிந்தியில் மாற்றப் பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம்.
தி டெலிகிராப்:
* புதிய அய்பிசி, சிஆர்பிசி மற்றும் எவிடன்ஸ் சட்டம் ஆகியவற்றின் பெயர்கள் ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்திருப்பது, அரசமைப்புச் சட்டத்தின் 348 பிரிவிற்கு எதிரானது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* 2012 இல் அத்வானியின் முன்மொழிவுக்கு எதிராக தற்போது மோடி அரசு தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து மசோதா அறிமுகப்படுத்தியுள்ளது என ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment