நள்ளிரவு பூஜை, மந்திரத்தால் பணம் இரட்டிப்பாகுமா? காவல்துறையிடம் சிக்கிய மோசடிப் பேர்வழிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

நள்ளிரவு பூஜை, மந்திரத்தால் பணம் இரட்டிப்பாகுமா? காவல்துறையிடம் சிக்கிய மோசடிப் பேர்வழிகள்

தேனி, ஆக. 7- நள்ளிரவு பூஜை, மந்திரத்தால் பணம் இரட்டிப்பாக மாறும் என்று கூறி பலரையும் ஏமாற்றி வந்த மோசடிக் கும்பல் காவல்துறையின ரிடம் பிடிப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பை ஒன்றில் மாமிசங்களுடன் நின்ற கார் ஒன் றில் 3 பேர் இருந்தனர். அங்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மதுகுமாரி தலைமையில் வாகன சோதனை நடந்தது.

அப்போது மூவர் மாமிச உறுப்புகளுடன் சிக்கினர். இவர்களிடம் நடத்திய  விசாரணையில். மதுரை அய்யனார் கோட் டையை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி (வயது 39), கமுதியை சேர்ந்த டேவிட் பிரதாப்  சிங் (வயது 40), மற்றும் பசும்பொன் கிரா மத்தை  சேர்த்த கமுதி மேனாள் ஒன்றிய அதி முக செயலாளர் முருகன் என தெரிந்தது. இதில் கொண்டுவரப்பட்ட பையில் இருந்த ஈரல், மூளை, நாக்கு  போன் றவை காவல்துறையினரி டம் சந்தேகத்தை ஏற்ப டுத்தியது. 

தொடர்ந்து காவல் துறையினரின் விசார ணையில், பையில் கொண்டு வரப்பட்டது மனித உறுப்புகளா அல் லது விலங்கினங்களின் உறுப்புகளா என ஆய்வு செய்யப்பட்டது. காவல்துறையினரிடம் விசாரணையில், பணம் இரட்டிப்பு செய்வதாகக் கூறி மோசடி செய்து வருகின்ற கும்பலின் தலை வனாக செயல்பட்ட உத்தமபாளையத்தை சேர்ந்த ஜேம்ஸ் (வயது 55), மற்றும் வண்டிப் பெரியார் மூவாற்று புழாவை சேர்ந்த செல் லப்பா, மற்றும்  உத்தம பாளையம் தென்னஞ்சாலையை சேர்ந்த பாண்டி, மற்றும் உத்தமபாளையம் களிமேட்டுபட்டியை சேர்ந்த பாவா பக்ருதீன் (வயது 42), ஆகியோர் சேர்ந்து  பணம் ஏமாற்றி பறிக்க முயன்றது தெரிய வந்தது. 

குறிப்பாக, உத்தம பாளையம் பாறைமேடு தெருவை சேர்ந்த மந்திர வாதி என்று கூறிக்கொள் ளும் ஜேம்ஸ் (வயது 55), என்பவர் நள்ளிரவில் பூஜை செய்தால், பணம் இரட்டிப்பாக மாறும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பி அலெக்ஸ்பாண்டி தான் கொண்டு வந்த ரூ.2.50 லட்சம் பணத்தை, செல் லப்பாவிடம் கொடுத்து உள்ளார். அவர் தந்த பையை பிரிக்கக்கூடாது என்று கூறி அனுப்பி உள் ளார். இதனை  மந்திர வாதி ஜேம்சிடம் தந்தால், பணம்  5 லட்சமாக மாறும் என கூறப்பட்டுள் ளது.  கொடுக்கப்பட்ட பையை, எடுத்துக் கொண்டு வந்த போது தான், ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அலெக்ஸ் பாண்டி, உத்தம பாளை யம் காவல்நிலையத்தில் புகார்  அளித்தார். இதனை அடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

அவர்கள் தப்பிச் சென்ற கார் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா மூலம் ஆய்வு செய்யப் பட்டு, தனிப்படை காவல்துறையினர் மூவரையும் கைது செய்து, உத்தமபாளையம் காவல் நிலையம் கொண்டு வந் தனர். 

நள்ளிரவு பூஜை, மந்திரத்தின்மூலம் பணத்தை இரட்டிப் பாக்க முடியும் என்று நம்புகிற பேராசைக்கா ரர்கள், மோசடிபேர்வழி கள் என இதுபோன்ற மூடத்தனங்களுக்கு  முடிவு கட்டும் நாள் எந்நாளோ?

No comments:

Post a Comment