படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

படத்திறப்பு - நினைவேந்தல்

திருச்சி மாவட்ட முன்னாள் திராவிடர் கழக செயலாளர் மா.அபிமன்யு துணைவியாரும், அ.பிரபு அவர்களின் தாயாருமான  அ.நீலாவதி (83) வயது மூப்பின் காரணமாக  கடந்த 31.7.2023 அன்று இயற்கை எய்தினார். அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (6.8.2023) ஞாயிறு காலை 11.00.மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.  திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் கலந்து  கொண்டு மறைந்த நீலாவதி அம்மையாரின் படத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநகர அமைப்பாளர் சி. கனகராஜ், புத்தகம் பூமிநாதன், வண்ணைநகர் கழக தலைவர். ஆ.ஜெயராஜ், உறையூர் முரசொலி ஆ.செல்வம்,  அ.பிரபு, மகாலட்சுமி பிரபு, முனைவர். அ.சந்திரமோகன், முத்துலட்சுமி, வழக்குரைஞர்  சோ.ராஜேஷ் கண்ணா,  சோ.பிரேம் குமார்,  சோ.கஸ்தூரி மோகன், திவான் பகதூர், சிறீதேவி திவான் பகதூர், செல்வி. அபிநயா, சிறீஅபி அருணா, நதியா, ஆதி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment