விருதுநகர்,ஆக.28- விருதுநகர் மொழிப் போர் வீரர் சங்கரலிங்கனார் திட லில், 25.08.2023 அன்று மாலை 6 மணிக்கு, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார் பில், டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள், தேசிய அறிவியல் மனப் பான்மை நாள் விழிப் புணர்வுப் பிரச்சாரக் கூட் டம் நடைபெற்றது.
மாவட்ட ப.க. தலைவர் பெ.த.சண்முகசுந்தரம் தலைமை உரையாற்றினார்.
மாவட்ட ப.க. துணை அமைப்பாளர் மா.பாரத் வரவேற்புரையாற்றினார். சி.பி.அய். நகரச் செயலாளர் சோ.முத்துக்குமார், மாவட்ட கழகத் தலை வர் கா.நல்லதம்பி, மாவட்ட ப.க. அமைப்பாளரும் சாத் தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக், மாவட்ட சி.பி.அய். பொரு ளாளர் சு.பழனிக்குமார் ஆகியோர் விழிப் புணர்வு உரையாற்றினர்.
நிறைவாக மந்திரமா? தந்திரமா? கலை நிகழ்ச்சி யாளர், மதுரை சுப.பெரி யார் பித்தன் அவர்கள் "அறிவியல் மனப்பான்மை வளர்ப் போம்! அறியாமை அகற்று வோம்!" என்ற தலைப்பில், மந்திரமல்ல! அனைத்தும் தந்திரமே செயல் விளக்க நிகழ்ச்சியினை எழுச்சியுடன் நடத் தினார்.
கோயில்கள் நிறைந்த திட லில், பக்தர்களையும் ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சி சிறப் பாக அமைந்தது. மாவட்ட கழக செயலாளர் விடுதலை தி.ஆதவன் நிகழ்வை ஒருங்கி ணைத்து வழிநடத்தி னார்.
சி.பி.அய். மேனாள் நகரச் செயலாளர் கே.எஸ்.காதர்மை தீன், பொறியாளர் மு.ஊர்க் காவலன், கழக பொதுக் குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் பா.இரா சேந்திரன், இளைஞரணிச் செயலா ளர் க.திருவள்ளுவர் மற்றும் தோழர்கள், தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பெருமள வில் பங்கேற்றுச் சிறப்பித் தனர். இறுதியாக மாவட்ட கழக அமைப்பாளர்
வெ.முரளி நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment