நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் உரிமத்தை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் உரிமத்தை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்


புதுடில்லி, ஆக.1
நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ், மருத் துவர்களின் உரிமத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் கோஸ்தோ பெஹாரி தாஸ் என்ற மருத்துவர், விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டடம் கட்டினார். அதனை இடிப்பது தொடர்பான உத்தரவை அவர் பின்பற்றத் தவறி யதால், நீதிமன்றத்தை அவமதித் ததாக அவரின் மருத்துவ உரிமத்தை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக கோஸ்தோ பெஹாரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சஞ்சய் கரோல் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறிய தாவது: ஒரு மருத்துவர் தொழில்ரீதியாக நடத்தை தவறுவதும், அவர் நீதிமன்றத்தை அவமதிப்பதும் வெவ்வேறானவை. அவர் தொழில் ரீதியாக தவறாக நடந்துகொண் டால், அவர் மீது தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் கீழ்தான் நடவடிக்கை மேற் கொள்ள முடியும். மருத்துவர் களுக்கு உரிமம் வழங்குவதும், அதனை ரத்து செய்வதும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்துக் குட்பட்டதாகும்.

அதேவேளையில், ஒருவர் நீதி மன்றத்தை அவமதித்தால், அவ ருக்கு 6 மாதங்களுக்கு மிகாமல் சிறைத் தண்டனை அல்லது ரூ.2,000-க்கு மிகாமல் அபராதம் விதிக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டப் பிரிவு 12 (1) பரிந்துரைக்கிறது. இதைத் தாண்டி வேறு எந்தத் தண்டனையையும் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக பரிந்துரைக்க முடியாது என்று அந்தச் சட்டத்தின் 2-ஆவது உட்பிரிவு தெரிவிக்கிறது.

எனவே நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-இன் கீழ், மருத்துவர் களின் உரிமத்தை நீதிமன்றங்கள் ரத்து செய்ய முடியாது. அதைச் செய்ய தேசிய மருத்துவ ஆணை யத்துக்குத்தான் அதிகாரம் உள் ளது என்று தெரிவித்தனர். இதை யடுத்து கோஸ்தோ பெஹாரியின் உரிமத்தை ரத்து செய்து கொல் கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை களை மேற்கொள்ளும்போது நீதிமன்றங்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது என்று அறிவுறுத்தினர்.


No comments:

Post a Comment