இம்பால், ஆக 13 - மணிப்பூர் சம்பவத்தில் குறிப்பிட்ட சமூகத்தி னரை அடி பணிய வைக்க பாலியல் வன்கொடுமையை வன்முறை கும் பல் பயன்படுத்தியதாக உச்ச நீதி மன்றம் வேதனை தெரிவித்துள் ளது. மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக கடந்த மே 4ஆம் தேதி முதல் நடந்த குற்றங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையி லான அமர்வு கடந்த 7ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் பதிவேற்றப்பட் டுள்ளது. அதில், “மணிப்பூர் சம்பவத்தில் குறிப்பிட்ட சமூகத் தினரை அடி பணிய வைக்க வன் முறை கும்பல் பாலியல் வன்கொடு மையை பயன்படுத்தி இருப்பது வேதனை அளிக்கிறது.
இது போன்ற மோதலின் போது பெண்களுக்கு எதிரான வன்முறை, கொடூரமானது. பெரும் பான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால் தப்பி விடலாம் என்ற எண்ணத்தில் வன்முறை கும்பல் பெண்கள் மீது தாக்குதல் நடத்து வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடி யாது,” என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த மே 3ஆம் தேதி வன்முறை சம்பவத்தின் போது, சூரசந்த்பூரில் குமுஜம்பா லெய்கை பகுதியில் பற்றி எரிந்த தனது வீட்டில் இருந்து தப்பி வெளியேறிய 37 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர் பாக பிஜ்னுபூர் காவல் நிலையத்தில் கடந்த 9ஆம் தேதி தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள் ளது. இவ்வழக்கில் குற்றவாளி களை கைது செய்ய கோரி, நூற்றுக் கணக் கான மீரா பைபிஸ் பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத் தினர்.
மணிப்பூர் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அவரது டிவிட்டர் பதிவில், “மக்களவையில் தனது 2.12 மணி நேர உரையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஏன் 3 நிமிடங்கள் மட் டுமே பேசினார்? மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாடு பற்றி ஏன் பேசவில்லை? மணிப்பூருக்கு எப் போது வருவீர்கள்?’’ என்று பிரத மருக்கு 3 கேள்விகளை எழுப்பி உள்ளார்.
No comments:
Post a Comment