தைவானுக்கு படிக்கச் செல்லும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

தைவானுக்கு படிக்கச் செல்லும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவிகள்

சென்னை, ஆக.12 - முதன் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 அரசுப் பள்ளி மாணவிகள், தைவான் நாட்டில் இளநிலை கல்லூரிப் படிப்பை மேற்கொள்ள உள்ளனர். இவர்களில், ஒருவரது பெற்றோர் தினக்கூலி தொழிலாளர்கள் ஆவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பனந் தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஜெயசிறீ பெருமாள். மற்றவர் சென்னையைச் சேர்ந்த மாணவி அவல்சிந்து ஜி.ஜெயலெட்சுமி. இவர்கள் இருவரும் முழு  கல்வி உதவித் தொகையுடன் கிழக்கு ஆசிய நாடான தைவானில், தங் களது இளநிலை கல்லூரிப் படிப்பை தொடர  உள்ளனர். 

மாணவி ஜெயசிறீ இயந்திர  பொறியியல் படிப்பும் (Mechanical Engineering), மாணவி ஜெயலெட்சுமி பன்னாட்டு வர்த்தகப் படிப்பையும் மேற்கொள்ள உள்ளனர்.

இதில், மாணவி ஜெயசிறீ தைவானின் குன் ஷான் பல்கலைக் கழகத்தி லும், மாணவி அவல்சிந்து ஜெயலெட்சுமி மிங் சுவான் பல் கலைக்கழகத்திலும் பயில உள் ளனர்.

இவர்களில் மாணவி ஜெயசிறீ பெருமாள், அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியாவார். இவரின் பெற்றோர் பனந்தூர் கிராமத்தில் அன்றாட கூலி வேலை செய்பவர்கள்.

இதுகுறித்து ஜெயசிறீ கூறுகையில், “நான் 10 ஆம் வகுப்பு வரை கிராமத்தில் உள்ள அரசுப் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அதன்பிறகு, கிருஷ்ண கிரியில் 4-5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன்.

கடந்த 2022 மார்ச் மாதம் நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 576 மதிப்பெண்கள் எடுத்தேன். பொறியியல் படிக்க, நான் ஜேஇஇ தேர்வு எழுத வேண்டியிருந்தது. அதற்கு எனது பெற்றோரை சமா தானப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால், ஜேஇஇ தேர்வை சிறிது இடை வெளிக்குப் பிறகே என்னால் எழுத முடிந்தது.

இதற்காக சென்னை சைதாப் பேட் டையில் உள்ள பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெற்றேன். பிறகு எனக்கு நாக்பூர் என்அய்டியில் இடம் கிடைத் தது” என்றார். 

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயசிறீ தனது படிப்பைத் தொடர வசதியில்லாத நிலையில் முழு கல்வி உதவித் தொகையுடன் தைவான் நாட்டில் கிடைத்திருக் கும் படிப்பைத் தொடரவிருக் கிறார் என்பது, அவரது விடாமுயற்சிக்கும் தளரா உழைப்புக் கும் கிடைத்திருக்கும் பலனாகும்.

No comments:

Post a Comment