பிலிகுண்டுலு, ஆக 28 கருநா டகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற் றின் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனி டையே கருநாடக அணைகளில் இருந்து தமிழ்நாட் டிற்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக இரு மாநில அரசு களுக்குமிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், கருநாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 4092 கன அடியில் இருந்து 7068 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 5068 கன அடியாக அதிகரித் துள்ளது. கபினி அணையில் இருந்து 3ஆவது நாளாக 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment