சென்னை, ஆக. 7- ஆங்கிலக் கால்வாயை இரு மார்க்கத்திலும் நீந்தி கடந்து சாதனைப் படைத்த இந்திய வீரர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேனி மாவட்ட மாணவர் சினேகனும் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாட்டின் இடையே கடலில் அமைந்துள்ள ஆங்கிலக் கால் வாயை இரு மார்க்கத்திலும் சுமார் 72 கிலோமீட்டர் தூரம் நீந்தி, ஆறு பேர் கொண்ட இந்திய நீச்சல் வீரர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது மாணவன் சினேகன் என்பவர் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளார். இங்கிலாந்து நாட்டிற்கும், பிரான்சு நாட்டிற்கும் இடையே கடலில் 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்கிலக் கால்வாய் அமைந்துள்ளது.
இதில் இங்கிலாந்தில் இருந்து பிரான்சு நாடு வரைக்கும் மீண்டும் பிரான்சிலிருந்து இங்கிலாந்து நாடு வரைக்கும் என இரண்டு வழி தடங்களிலும் என 72 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனைப் படைக்க இந்திய நீச்சல் குழு திட்ட மிட்டது.
இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழு தயாராகி வந்தனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி, இந்திய நீச்சல் குழுவைச் சேர்ந்த ஆறு பேரும் இங்கிலாந்து நாட்டில் இருந்து பிரான்சு வரை 36 கிலோ மீட்டர் தூரமும்; மீண்டும் பிரான்சி லிருந்து இங்கிலாந்து வரை 36 கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 72 கிலோமீட்டர் ரிலே முறையில் நீந்தி சாதனைப் படைத்தனர்.
கடும் குளிர் நிலவும் இந்த கால்வாயில் சுறா மீன்களும், நீர் நாய்களும், ஜெல்லி மீன்களும் மிகவும் ஆபத்தான நீரோட்டமும் காணப்படும். இப்பகுதியில் இவர் கள் 31 மணி நேரம் 29 நிமிடங்களில் இருமார்க்கத்திலும் 72 கி.மீ கடந்து சாதனைப் புரிந்துள்ளனர்.
ஆங்கிலக் கால்வாயை நீந்தி சாதனை படைத்த ஆறு பேர் கொண்ட இந்தியக் குழுவில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சினே கன்(15) இடம் பெற்று, இச்சாத னையைப் படைத் துள்ளார்.
சாதனை படைத்துள்ள இந்திய நீச்சல் குழுவுக்கு விஜயகுமார் என் பவர் பயிற்சியாளராக இருந் துள்ளார்.
இதையடுத்து நேற்று சென்னை விமான நிலையம் வந்த மாணவன் சினேகன், பயிற்சியாளர் விஜய குமார் ஆகியோருக்கு உறவினர்கள் மற்றும் நீச்சல் ஆர்வலர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித் தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய விஜயகுமார், ''நான் தேனி மாவட்டத்தில் நீச்சல் பயிற்சியாள ராக உள்ளேன். மாணவன் சினேகன் என்னிடம் எட்டு வருடமாக நீச்சல் பயிற்சி பெற்று வரு கிறார். சினேகன் இதற்கு முன் தலைமன்னார், தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி சாதனைப் படைத்துள்ளார்.
அதேபோல் கடந்த ஆண்டு அயர்லாந்து ஸ்காட்லாந்து இடையே கடலில் நீந்தி இளம் வயதில் சாதனைப் புரிந்தவர் என்று பட்டத்தைப் பெற்றார். தற்போது மூன்றாவதாக பிரான்சு, இங்கிலாந்து இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை கடந்து சாத னைப் படைத்துள்ளார். 18 வயதுக் குள் உலகளவில் கடலில் உள்ள 7 கால்வாய்களை நீந்தி சாதனைப் படைக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.
இதற்கு முன் குற்றாலீஸ்வரன் எனும் மாணவன் இளம் வயதில் கடலில் நீந்தி சாதனைப் படைத்தது போல், இவரும் சாதனைப் படைத்து "அர்ஜுனா விருது" போன்ற விருது களை பெறவேண்டும் என்ற முனைப் பில் பயிற்சி எடுத்து வருகிறார். மகாராட்டிரா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நீச்சல் வீரர்கள் இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து தேனி மாவட் டத்தைச் சேர்ந்த மாணவன் சினே கன் மட்டுமே பங்கேற்றார். நான் இந்திய அணியின் பயிற்சியாளராக கலந்துகொண்டேன்.
கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து குற்றாலீஸ்வரன், தனி ஆளாக ஆங்கிலக் கால்வாயை ஒரு மார்க்கத்தில் மட்டும் கடந்து சாதனைப் படைத்தார். அதன் பிறகு தேனி மாவட்டத்தில் இருந்து சினேகன் ஆங்கிலக் கால்வாயில் இரு மார்க்கத்தையும் கடந்து சாதனைப் படைத்துள்ளார்” என அவர் கூறினார்.
மாணவர் சினேகன் கூறுகை யில், “இங்கிலாந்து பிரான்சு நாட்டிற்கு இடையே கடலில் அமைந்துள்ள ஆங்கிலக் கால்வாயில் இந்தியாவைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் குழு, இரு மார்க்கத்திலும் நீந்தி கடந்து சாதனைப் படைத்துள் ளோம். இந்தியாவில் இருந்து இதுவரை யாருமே இரு மார்க்கத்திலும் நீந்தி சாதனைப் படைக்க வில்லை. தற்போது நாங்கள் சாத னைப் படைத்துள்ளோம்.
கடந்த ஒரு ஆண்டாக இதற்காகப் பயிற்சி எடுத்துள் ளோம். உலக அளவில் கடலில் உள்ள ஏழு கால்வாயில் மூன்றை நான் நீந்தி முடித்துள்ளேன். மீத முள்ள நான்கு கால்வாய்களையும் நீந்தி சாதனைப் படைக்க வேண்டும். ஒலிம்பிக்கில் பங்கேற்றும் சாதனைப் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறேன். தமிழ் நாடு முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை சந் தித்து வாழ்த்துப் பெற வேண்டும்", என அவர் கூறினார்.
No comments:
Post a Comment