திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துச் செய்தி
சந்திரயானின் வெற்றி மனித அறிவுக்கும், ஆற்றலுக்கும், அறிவியலுக்கும் ஒரு சான்று!
இனியாவது சந்திரனுக்கு 27 மனைவிகள் என்ற கட்டுக்கதையும், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்பன போன்ற மூடநம்பிக்கைகளும் ஒழியட்டும்.
நிலவில் கால் வைத்த நாம்,
நிலவைத் தாண்டியும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.
செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் விண்கலன்கள் இனி செவ்வாய் தோஷ மூடநம்பிக்கையையும் முறியடிக்கட்டும்.
சந்திரயான் வெற்றிக்கு உழைத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனை வருக்கும், குறிப்பாக திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் அவர்களுக்கும் நம் வாழ்த்துகள், பாராட்டுகள்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 23.8.2023
No comments:
Post a Comment