குஜராத் உயர்நீதிமன்றத்தின் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 20, 2023

குஜராத் உயர்நீதிமன்றத்தின் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

அகமதாபாத், ஆக. 20 குஜராத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கர்ப்ப மானார். அவரது 26 வார கருவை கலைக்க அனுமதி கேட்டு மாநில உயர்நீதிமன்றத் தில்  கடந்த 7-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை மறுநாள் விசாரித்த உயர்நீதிமன்றம் பெண்ணின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மருத்துவக் குழுவுக்கு உத்தர விட்டது. 

அதன்படி இளம்பெண்ணின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவக் குழு 10-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. 

இதை 11-ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை 12 நாட்களுக்கு பின், அதாவது வருகிற 23-ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.

இந்த விவகாரத்தில் ஒவ் வொரு நாளும் மதிப்பு மிக்கது என்பதால், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வழக்குரைஞர் விஷால் அருண் மிஸ்ரா வாதாடினார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜால் பூயன் ஆகியோரை கொண்ட சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது குஜராத் உயர்நீதி மன்றத்தின் நடவடிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி வெளியிட் டனர். இதுபோன்ற சந்தர்ப்பங் களில் அவசர உணர்வு இருக்க வேண்டும் எனவும், இந்த வழக்கை சாதாரண வழக்காக கருதி ஒத்திவைக்கும் "குறைவான மனப்பான்மை" இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் கடந்த 11-ஆம் தேதியே மருத்துவக் குழு அறிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக 23-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது? என கேள்வி எழுப்பிய நீதி பதிகள், அதற்குள் எத்தனை நாட்கள் கடந்து விடும்? எனவும் கவலை தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கரு ஏற்கனவே 26 வாரம் கடந் திருக்கும் நிலையில், வழக்கு ஒத்திவைக்கப்பட்டதால் மதிப்பு மிக்க நாட்களை இழந்திருப்ப தாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

பின்னர், தற்போது 27 வார கருவாகி இருப்பதால், புதிதாக மருத்துவப் பரிசோதனை செய்து இன்று மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், திங்கட் கிழமை முதல் வழக்காக இதை விசாரிப்போம் என்றும் அறிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக மாநில அரசு மற்றும் சம்பந்தப் பட்ட துறையினருக்கு தாக்ககீது அனுப்பவும் நீதிபதிகள் உத்தர விட்டனர். 

இந்தியாவில் திரு மணமான பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு மிகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவினருக்கு அதிக பட்சமாக 24 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அரசு அனு மதிப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment