சென்னை, ஆக.3- இந்தோனேசியா - சென்னை இடையே நேரடி விமான சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. இந்தோனேசியா நாட்டின் சுற்று லாத்தலமான குவாளா நாமு வுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை.
அதனால், மலேசியா அல்லது சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்று, அங்கு இருந்து இணைப்பு விமானங்கள் மூலம் குவாளா நாமுவுக்கு பயணிகள் செல்கின்றனர். நேரடி விமான சேவையை தொடங்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை வைத்திருந் தனர்.
அதன்படி, இந்தோனேசியா நாட்டில் உள்ள பாடிக் ஏர் விமான நிறுவனம், குவாளா நாமு - சென்னை - குவாளா நாமு இடையே தினசரி நேரடி விமான சேவையை அண்மையில் தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment