குடந்தை தோழர் கு.கவுதமன் மறைவுக்கு இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

குடந்தை தோழர் கு.கவுதமன் மறைவுக்கு இரங்கல்

கும்பகோணம் மாநகர திராவிடர் கழகத்தினுடைய தலைவரும், மேனாள் குடந்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமான  

கு. கவுதமன்  (வயது 68) 24-8-2023 அன்று இரவு 1.30 மணி அளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

சோழபுரம் பகுதியில் அவரது தந்தை குமாரசாமி அவர்களுக்குப் பின், நீண்ட நாட்களாக இயக்கப் பணிகளை அவரது.    குடும்பத்தோடு இணைந்து செய்து வந்தார்  கவுதமன். மானமிகு குமாரசாமி அவர்கள் 'முரளீஸ் கபே' போராட்டம் உள்பட பல போராட்டங் களிலும் ஈடுபட்டுச் சிறை சென்றவர்.

 தொடர்ந்து இடை இடையே சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையிலும் இயக்கம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர் மானமிகு கு.கவுதமன்.

மறைந்த கு. கவுதமனின் மனைவி வசந்தி.  மகள்கள் - அருள்மொழி, மலர்க்கொடி ஆகியோராவர். அவரது விழிகள் அரவிந்த் கண் மருத்துவமனைக்குக் கொடை யளிக்கப்பட்டன.

குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
25.8.2023

குறிப்பு: திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்  தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் உள்ளிட்ட தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் திரளாகச் சென்று இறுதி மரியாதை செலுத்துவார்கள். தொடர்புக்கு: 9952576131


  


No comments:

Post a Comment