சிதம்பரம், ஆக.12 சிதம்பரம் அருகே அழிஞ்சமேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு காலை 9 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம்(10.8.2023) இரவு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்பட்டது. நேற்று காலை கோவில் நிர்வாகிகள் கதவை திறக்கும் போது கோவிலில் உள்ளே இருந்த கருவறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின், கோவில் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த 2லு பவுன் தாலி செயின், பித்தளை சூலம் ஒன்றும் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் காவல்துறை துணை ஆய்வாளர் பரணிதரன் தலைமையிலான காவல்துறையினர் நிகழ்வு டத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகையை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத மனிதர் களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment