தேனி மாவட்டம், உத்தம பாளையம் வட்டம் சின்ன ஓவுலா புரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ்- ஈஸ்வரி இணையரின் மகன் ஈஸ்வரன் (18 மாதம்). இக்குழந்தை யின் கை, கால், செயல் இழந்து, சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன்பு, குழந்தைக்கு திடீர் என காய்ச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பெற்றோர் குழந்தையை உடனடி யாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த் தனர்.
அங்கு குழந்தைக்கு செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் மதிப்பிலான இம்யூனோகுளோபின் மருந்து உடனடியாக வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணித்து வந் தனர். குழந்தைக்கு செயற்கை சுவா சம் அளிக்க சிறப்பு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
100 நாட்களுக்கு மேல் செயற்கை சுவாசத்தில் இருந்த குழந்தையின் உடல் நலம் முன்னேற்றம் அடைந் தது. தற்போது குழந்தை நலமுடன் பெற்றோருடன் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் என்.வெங்கடாசலம் நேற்று (8.8.2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
18 மாதக் குழந்தைக்கு செயற்கை சுவாச அறுவை சிகிச்சையும், 100 நாட்களுக்கு மேல் செயற்கை சுவா சம் அளித்தும் குணமடையச் செய்த சம்பவம் அரசு மருத்துவமனையில் இதுவே முதல் முறையாகும். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவ மனையில் செய்தால் லட்சக்கணக் கில் செலவாகும்.
ஆனால், அரசு மருத்துவ மனையில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு குழந்தையை காப்பாற்றிய மருத்துவர் கள், செவிலியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கிறது என்றார்.
No comments:
Post a Comment