நன்கொடை - சந்தாக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

நன்கொடை - சந்தாக்கள்

* தமிழர் தலைவர் தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்" விருதினைப் பெறும் மகிழ்வாக அவரிடம் அளிக்கப்பட்ட நன்கொடைகள்: காட்டூர் சி.கனகராசு ரூ.100, தெற்குநத்தம் பி.பெரியார் நேசன் விடுதலை வளர்சி நிதிக்கு ரூ.100, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் விடுதலை வளர்சி நிதிக்கு ரூ.500, வல்லம் தோழர் விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.100, மன்னார்குடி பகுத்தறிவாளர் கழகத் தோழர் கோவி.அழகிரி விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளனர்.

* தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான நன்கொடை ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார்.

* தகைசால் தமிழர் " விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து களை தெரிவிப்பதற்காக சென்னை வேப்பேரி பெரியார் திடலில் 04-08-2023 அன்று மதியம் 2 மணிக்கு ஆவடி மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு தலைமையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், துணைத் தலைவர்கள் மு.ரகுபதி, வை.கலையரசன், துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் மகளிரணி அமைப்பாளர் ராணி, இளைஞரணி செயலாளர் ஏ.கண்ணன், பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன்( எ) அருள்தாஸ், அம்பத்தூர் பகுதி செயலாளர் அய்.சரவணன், ஆவடி நகர துணைத் தலைவர் சி.வஜ்ரவேல், பூந்தமல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன், முகப்பேர் முரளி, பெரியார் பெருந்தொண்டர் அ.வெ.நடராசன், மாங்காடு தி.மு.க.பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் எ.மனோகரன் ஆகியோர் வருகை தந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்வின் மகிழ்வாக மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் பயனாடைக்கு பதில் ரூபாய் ஆயிரம் (1000), செயலாளர் க.இளவரசன் பெரியார் உலகத்திற்கு ரூபாய் ஆயிரம் (1000), துணைத் தலைவர் மு.ரகுபதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் அய்நூறு (500) என நன்கொடை வழங்கினர். பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், மாங்காடு எ.மனோகரன் சால்வை அணிவித்தார். பூந்த மல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன் வழக்கமாக வழங்கும் ஆகஸ்டு மாதத்திற்குரிய நன்கொடைகளை வழங்கினார்.

No comments:

Post a Comment