மும்பை காவல்துறை கட்டுப் பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அழைப்பு விடுத்து மும்பை புறநகர் ரயிலில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
காவல்துறையினர் உடன டியாக அந்த மொபைல் எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.
அந்த அழைப்பு மும்பையில் உள்ள ஜுகு பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் துறையினர் அங்கு சென்று மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் 25 வயது இளைஞர் என்பதும், அவர் பீகாரில் இருந்து 10 நாட்களுக்கு முன்புதான் மும்பைக்கு வந் துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
அந்த நபர் காவல் துறை கட்டுப் பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தபோது மது போதையில் இருந்ததாக கூறப் படுகிறது.
காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் விடுப் பதற்காக அவர் பயன்படுத்திய அலைபேசியை பறிமுதல் செய்து தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment