தருமபுரி, ஆக. 8- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் 30.7.2023 மற்றும் 31.7.2023 ஆகிய இரு நாட்களில் மாவட்டத்திலுள்ள பென்னாகரம், கடமடை, இண்டூர், பி.அக்ரகாரம், பாப்பாரப்பட்டி ஆகிய பகுதியிலுள்ள ஒன்றிய பொறுப்பாளர்களுடன் சந்தித்து முகவரி, தொடர்பு எண்கள் சேக ரிப்பு மற்றும் புதிய பொறுப்பாளர் களுடன் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வு தருமபுரி மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமையில் நடைபெற்றது, தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஒன்றிய கழக மற்றும் புதிய பொறுப் பாளர்களுக்கு இயக்க வரலாற்றின் ஏடுகளை வழங்கி அவர்களுக்கு பொன்னாடை போற்றி சிறப்பித் தார்.
இந்நிகழ்வில் ஒவ்வொரு ஒன் றியத்தின் பேருந்து நிறுத்தத்தில் இயக்க கொடி புதியதாக அமைத்து, ஒவ்வொரு ஒன்றியத்திலுள்ள பொறுப்பாளர்களின் வீட்டின் மேலும் இயக்க கொடி பறக்க விட வேண்டுமெனவும், தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் விடு தலை அறிக்கையான செடி,கொடி, படி இதனை நிறைவேற்றும் வித மாக இந்த சுற்றுப்பயண சந்திப்பு அமைந்தது.
இந்த இயக்க சுற்றுப்பயணத்தில் மாவட்ட செயலாளர் பெ.கோவிந்த ராஜ், மாவட்ட துணை செயலாளர் சி.காமராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கதிர்.செந்தில் குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்ல துரை, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெ.மாணிக்கம், பக ஆசிரியரணி இர.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் இயக்க சுற்றுப் பயணத்தில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment