சென்னை, ஆக. 1- சோழிங்க நல்லூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் விடுதலை நகர், சுண்ணாம்புக் கொளத் தூரில் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் ஆனந்தன் அலுவலகத் தில் 30.07.2023 ஞாயிறு முற்பகல் 11.00 மணியள வில், நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர் களாக தலைமைக் கழக அமைப்பாளர்கள் தே.செ.கோபால், மற்றும் கழக அமைப்புச் செயலா ளர் வி. பன்னீர் செல்வம் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலா ளர் ஆ.விஜய்உத்தமன் ராஜ் வரவேற்புரை நிகழ்த் தினார், மேலும் மாவட் டக் கழக பொறுப்பாளர் கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துகளை முன்வைத்தனர்.
மாவட்ட பகுத்தறிவா ளர் கழக தலைவர் ஆனந் தன் நன்றியுரை ஆற்றினார்.
இறுதியாக பங்கேற்ற அத்துணை தோழர்களுக் கும் மதிய உணவாக சுவையான பிரியாணி வழங்கப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டம் இனிதே மிகச் சிறப்பாக நடந்தேறியது. கலந்து கொண்ட தோழர்களின் கருத்து களை ஏற்று சிறப்பான மூன்று முத்தான தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டது.
மாவட்டத்திற்கு உட் பட்ட பகுதிகளான காம ராஜபுரம், சுண்ணாம்பு குளத்தூர், மேடவாக்கம், சோழிங்கநல்லூர், மடிப் பாக்கம், ஆலந்தூர், ஆதம் பாக்கம், நங்கநல்லூர், நீலாங்கரை, மற்றும் கேளம்பாக்கம் ஆகிய அனைத்து பகுதிகளின் மய்யப்பகுதிகளிலும் கழகக் கொடியேற்றுவது எனவும், எதிர்வரும் 7.8.2023 அன்று, பாலவாக் கத்தில் கலைஞர் நூற் றாண்டு விழா, வைக்கம் நூற்றாண்டு விழா மற் றும் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் மனி தாபிமானமற்ற சம்பவத் தினை கண்டித்து, நிகழ்வை கண்டன கூட்டம் நடத் துவது எனவும், மாவட்ட அளவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத் துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment