திருச்சி, ஆக. 31 - பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்ப நர், இளநிலை மற்றும் பட் டயப்படிப்பு மருந்தியல் மாணவர்கள் மொத்தம் 28 பேர் திருச்சி தேசிய கல்லூரியில் 27.8.2023 அன்று மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு 8 தங்கப்பதக்கம், 9 வெள்ளிப் பதக்கம் மற்றும் 11 வெண் கலப்பதக்கங்களை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பெண்களுக்கு கல்வியறிவுடன் வீரவிளையாட்டுகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்ற அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையிலும் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் கராத்தே, டேக்வாண்டோ பயிற்சிகளை பெரியார் மருந் தியல் கல்லூரி தொடர்ந்து வழங்கி வருகிறது.
அதன் பெருமுயற்சியாக மாவட்ட அளவில் பல கல்லூரி கள் கலந்து கொண்ட இப் போட்டியில் 28 மாணவர்களில் 25 பேர் மாணவிகள் என்பதும் 3 பேர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் 7 மாணவிகள் தங்கப்பதக்கம் வென்றனர் என்பதும் ஒட்டு மொத்த வாகையர் பட்டத்தை பெரியார் டேக்வாண்டோ வீர விளையாட்டு கழகம் வென்றது என்பதும் பாராட்டிற்குரியது.
பதக்கங்கள் வென்ற மாண வர்களுக்கு கல்லூரியின் நிர் வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, பேராசிரி யர்கள் மற்றும் பணியாளர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment