பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு ஆளுநர் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு ஆளுநர் கடிதம்

 அடுத்த அடாவடித்தனத்திற்கு தயாராகி விட்டார் ஆர்.என்.ரவி
உயர் கல்வித் துறையின் பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டாமாம்!

சென்னை, ஆக. 23- தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறை களை மேம்படுத்தவும், அவர் களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும், தொழில் துறை யின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வும், அதன் மூலம் வேலைவாய்ப்பு களைப் பெருக்கவும் உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட மறு சீரமைப்புப் பணி மேற்கொள்ளப் பட்டு, உருவாக்கப்பட்டன. 

மாதிரிப் பாடத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாநிலத்திலுள்ள 90 சதவீத அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக் கேற்ப சில மாற்றங்களுடன் மாதி ரிப் பாடத்திட்டங்களை நடை முறைப்படுத்தியுள்ளன.  

இதையடுத்து மாதிரிப் பாடத் திட்டத்தின் நோக்கத்தினை விளக்க உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை யில் கடந்த 2ஆம் தேதி சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

அக்கூட்டத்தில், இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் 70 சதவீத தன்னாட்சிக் கல்லூரிகளில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

சில தன்னாட்சிக் கல்லூரிகள், அவர்களது கல்லூரியில் தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இந்த மாதிரி பாடத்திட்டத்தினை நடை முறைப்படுத்துவதால் அவர்களது கல்லூரி தன்னாட்சியின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கருதுவதாகக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

தன்னாட்சிக் கல்லூரிகள் சார்பாகத் தெரிவிக்கப்பட்ட கருத் துகள் உயர்கல்வித்துறை சார்பில் பரிசீலிக்கப்பட்டன. அதன்படி தன்னாட்சிக் கல்லூரிகள் இந்த புதிய  மாதிரி பாடத்திட்டத்தினைத் தங்களது கல்லூரிகளில் நடை முறைப்படுத்திக் கொள்வது குறித்து அவர்களே தங்கள் விருப் பத்திற்கேற்ப முடிவு செய்து கொள் ளலாம் என உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கல் லூரிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரிப் பாடத்திட்டத்தைப் பின் பற்றத் தேவையில்லை என்றும், கல்வி பொதுப்பட்டியலில் இருப் பதால் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ள நிலையில் பொதுப் பாடத்திட்டத்தை மாநில அரசு கொண்டுவர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment