குன்கா தலைமையில் விசாரணைக் குழு
பெங்களூரு, ஆக.31 கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் கடந்த 2020_20-21 மற்றும் 2021-_2022 நிதி ஆண்டு களில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள், மருந் துகள், முகக் கவசம், தடுப்பூசி உள்ளிட்டவை கொள்முதல் செய்யப் பட்டன. இதற்காக பல கோடி ரூபாய் செலவிட்டதில் ஊழல் நடந்துள் ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட் டிருந்தது.
இதையடுத்து முதலமைச்சர் சித்தராமையா, ஓய்வு பெற்ற கருநாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் டி குன்ஹா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழு, அந்த ஊழல் புகார் குறித்து விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். நீதிபதி ஜான் டி குன்கா மறைந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்தவர்.
அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ஜெய லலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதித்தவர். அவர் தலைமையில் தற்போது குழு அமைக் கப்பட்டுள்ளதால் பாஜக வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment