நீங்களும், மனிதரோடு மனிதராக சமத்துவ வாழ்வடைந்து மற்றை யோரைப்போலச் சுதந்திரமும், சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கிருக்குமாயின், நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்த்தெறியத் தயங்கக் கூடாது. உங்கள் சுதந்திரத்திற்கு எது தடையாயிருந்தாலும், அதனை ஒழிக்க முற்படுவீர்களானால், தீண்டாமை என்பது அரை நிமிஷத்தில் தானாய்ப் பறந்து விடுமென்பது திண்ணம்.
('திராவிடன்' 5.8.1929)
No comments:
Post a Comment