கொல்கத்தா, ஆக. 31 ஆளுநர் தன் நண்பர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிப் பதாக மம்தா குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தொடங்கப்பட்ட நாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கொல்கத்தா வில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சி தலைவரும், மேற்கு வங்காள மாநில முதலமைச்சருமான மம்தா பங்கேற்றார். கூட்டத்தில் அவர், மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-
நம் மீது தற்போது இன்னொரு கண்ணும் விழுந்துள்ளது. ஆளுநர் பதவியை நான் மதிக்கிறேன். ஆனால், ஆளுநர், அரசியல் சட் டத்தை மீறி நடந்து கொள்கிறார். ஆளுநர் என்பதால், அவர் பல் கலைக்கழகங்களின் வேந்தராகவும் இருக்கிறார். பல்கலைக் கழகங் களின் நிலைமையை பாருங்கள். தன் நண்பர்களை அவர் துணை வேந்தர்களாக நியமித்துக் கொள் கிறார். உதாரண மாக, பேராசிரியர் அனுபவமே இல்லாத ஒரு அய். பி.எஸ். அதிகாரியை துணை வேந்தராக நியமித்துள்ளார்.
பாரதிய ஜனதா அணி ஒன்றின் தலைவர், ஜாதவ்பூர் பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக் கப்பட்டுள்ளார். சட்டப்படி அவரவருக்கு ஒதுக்கப்பட் டுள்ள பொறுப்புகள் மீது பரஸ்பரம் மரியாதை இருக்க வேண்டும். ஆளுநர் பதவி என்பது முதல மைச்சர் பதவி போன்றது அல்ல. ஆளுநர்கள் நியமிக்கப்படுகி றார்கள். முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை குறைத்து மதிப்பிட யாரும் முயற்சிக்கக்கூடாது. மதவாத தீயை தூண்டிவிடக்கூடாது. மாணவர்களை அழைத்து ஊழல் பற்றி கேட்கிறார்கள். முதலில் இதற்கு பதில் சொல்லட்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஊழலில் ஈடுபட்டது யார்?
வங்கிகளை மூடியது, சர்ச் சைக்குரிய வெளிநாட்டு கரோனா தடுப்பூசியில் ஊழல்களில் ஈடுபட் டவர்கள் யார்? இதுபோன்ற பழி வாங்கும் அரசை நான் பார்த்தது இல்லை. நாடாளுமன்ற தேர் தலுக்கு முன்பு, என் அண்ணன் மகனும், கட்சியின் பொதுச் செயலாளருமான அபிஷேக் கை கைது செய்யப்போவதாக செய்தி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment