புதுடில்லி ஆக.1 காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று (30.7.2023) தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்ப தாவது:-
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீபகாலமாக 35 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அதன் பலனை பொது மக்களுக்கு கொடுக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. இதனால், ஏற்கெனவே பணவீக்க உயர்வால் அவதிப்படும் மக்கள், மேலும் சிரமப்படுகிறார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரி களையும் ஒன்றிய அரசு அதிகமாக வசூலிக்கிறது. இதனால், ஏழைகள், நடுத்தர மக்களின் பாக்கெட் கொள் ளையடிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விற்பனையின் பெயரில் இரக்கமின்றி கொள்ளை லாபம் ஈட்டப்படுகிறது. நடப்பு நிதி ஆண் டில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம் கிடைக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. முந் தைய ஆண்டுகளில், ரூ.33 ஆயிரம் கோடி லாபம் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மட்டு மின்றி, தனியார் எண்ணெய் நிறு வனங்களும் கொள்ளை லாபம் சம் பாதித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால், அத் தியாவசியப் பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலை யும் குறையும். ஆகவே, பெட்ரோல், டீசல் விலையை 35 சதவீதம் குறைக்க வேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
No comments:
Post a Comment