ஓஹோ, ஒவ்வொரு நாளும் முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் உற்சாக பானத்தை ஊத்திக் கொடுப்பது ‘தினமலர்' கூட்டம் தானா? சுரா பானம் குடித்தவர்கள் சுரர் - அதாவது ஆரியர்கள் என்றும், குடிக்க மறுத்தவர்கள் அசுரர்கள் - அதாவது திராவிடர்கள் என்றும் எழுதி வைத்திருக்கும் கூட்டம் உற்சாகப் பானத்தைப் பற்றிப் பேசுவதா? ஒன்றியத்தில் அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்ற திமிரில் பார்ப்பனர்கள் அளவுக்கு மீறி நிர்வாண ஆட்டம் போடுகிறார்கள்.
"அனைத்து காவல் நிலையங்களும் ஊழல் நிலையங்கள்" என்று இதே‘ தினமலர்' வாரமலர் எழுதியது பற்றி டிஜிபி அலுவலகத்திற்குப் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற தைரியத்தில் இப்படி முதலமைச்சரையே கொச்சைப்படுத்த ‘தினமலர்' கும்பலுக்கு திமிரடித்தனம் புரை ஏறி இருக்கிறது போலும் - எதை எழுதினாலும் திராவிட இயக்கத் தோழர்கள் அமைதி காப்பார்கள் என்ற எண்ணம் ‘தினமலர்' கும்பலுக்கு ஏற்பட்டிருக்கிறது போலும் - எதற்கும் ஓர் அளவு உண்டு, எச்சரிக்கை!
சங்கர மடத்திற்கு வந்த பெண்ணை கையைப் பிடித்து இழுத்த பேர்வழிகளெல்லாம் ஜகத்குரு! இத்தகைய யோக்கியதை உள்ளவர்கள் தான் மக்களால் போற்றப்படும் ‘திராவிட மாடல்' ஆட்சியின் தலைவரை தான்தோன்றித் தனமாக - பாம்பு விறு விறுத்தால் வளையில் தங்காது - என்பது போல எழுத ஆரம்பித்தால் அதன் விளைவு என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
இந்த "தினமலருக்கு"த்தான் முழுப்பக்க விளம் பரங்களை தி.மு.க. அரசு வாரி வாரிக் கொடுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது!
பார்ப்பன கீழ்த்தரத்திற்கு அரசின் நடுநிலைமைப் புரியுமா?
No comments:
Post a Comment