பெரியார் படிப்பகத்தில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பேப்பர்களும் மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெரியோர்களுக்கு பயன்படும் முறையில் நல்லதொரு படிப்பகமாக அமைந்துள்ளது. அதுவும் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளதால் நிறைய பொது மக்களும் சந்திக்க கூடிய இடமாகவும் மற்றும் பேருந்துக்காக நிற்கும் இடைவேளையில் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கிராமத்திற்கு செல்கின்ற மக்கள் அந்த நேரத்தில் உலக செய்திகளை படித்து தெரிந்து கொள்கின்றனர். கரும் பலகையில் நிந்தமும் ஒரு செய்தி தந்தை பெரியாரினுடைய கருத்துகள் பரிமாறப்படுகின்றன. அந்த வாசகத்தை படித்துப் பார்த்து மகிழ்ச்சி யடைகின்றனர். அதுபோல் அங்கு படிக்க வரும் மாணவர்களுக்கு நல்ல அறிவுரையும் சொல்லு கின்றனர். இந்த படிப்பகம் மக்களுக்கு கிடைத்த நல்லதொரு சேவையாக அமைந்துள்ளது.
பெரியார் படிப்பகத்திற்கு நன்றி.
- சோ. வைரமுத்து
பட்டதாரி ஆசிரியர்,
அரசு மேல் நிலைப்பள்ளி, தெக்கூர்,
No comments:
Post a Comment