புதுடில்லி, ஆக 6 ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கைது நடவடிக்கைக்கு தடை விதித்த நிலையில் அவருக்கு விருந்தளித்து மகிழ்ந்தார் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ். இஷ்த விருந்து நிகழ்ச்சி அண்மையில் டில்லி அரசு குடியிருப்பில் உள்ள லாலு மகள் மிசா பாரதி யின் வீட்டில் நடை பெற்றது. மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு குஜராத் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனைக்கு நேற்று உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த மகிழ்வைக் கொண்டாட ராகுல் காந்திக்கு, ராஷ்ட் ரீய ஜனதா தளம் தலைவர் லாலு விருந்தளித்தார்.
இந்த விருந்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மலர் பூங்கொத்து கொடுத்து கட்டி அணைத்து லாலு வரவேற்றார்.
இந்த விருந்தில் பிஹா ரின் புகழ்பெற்ற மேற்கு சம்பாரன் பகுதியின் ஆட் டிறைச்சியின் சிறப்பு உணவு பறிமாறப்பட்டது. இதற்கு அந்த ஆட்டிறைச் சியை பிஹாரிலிருந்து விமானத்தில் லாலு வர வழைத்திருந்தார். இந்த விருந்தில் லாலுவின் இளைய மகனும் பிஹா ரின் துணை முதல் வருமான தேஜஸ்வீ பிரசாத்யாதவும் கலந்து கொண்டார்.
எதிர்க்கட்சிகளின் கூட் டணியான 'இண் டியா' வின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது.
இச்சூழலில் ராகுலுக்கு கிடைத்த நீதிமன்ற தடை, மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர்களை உற்சாகப் படுத்தும் இந்த உத்தரவை லாலுவுடன் கொண்டாடினார் ராகுல். இந்த விருந்துக்குப் பின் அனை வரும் அரசியல் ஆலோ சனை நடத்தியதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment