வெளிநாடு வாழ் இந்தியர்கள் புகார்களைப் பதிவு செய்ய புதிய செயலி : காவல்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 4, 2023

வெளிநாடு வாழ் இந்தியர்கள் புகார்களைப் பதிவு செய்ய புதிய செயலி : காவல்துறை அறிவிப்பு

சென்னை, ஆக. 4 புகார்களைத் தடையின்றி பதிவுசெய்ய வெளி நாடுவாழ் இந்தியர்களுக்கான பிரத்யேக செயலியை தமிழ்நாடு காவல் துறை அறிமுகம் செய் துள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடுகாவல்துறை தெரிவித்துள்ளதாவது: வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தின ரின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்காக, சென்னை மெரினா காம ராஜர் சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலு வலகத்தில் வெளி நாடுவாழ் இந்தியர்கள் பிரிவு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. வெளிநாடுவாழ் இந்தி யர்கள் மின்னஞ்சல் வாயிலாகவும், நேரடி யாகவும் தங்களது புகார் மனுக்களை இப்பிரிவுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், வெளி நாடுவாழ் இந்தியர்களின் புகார்களைத் தடையின்றிபதிவு செய்வதற்கு ஏதுவாக,காவல்துறை சார்பில் வெளி நாடுவாழ் இந்தியர்களுக்காக பிரத் யேக செயலி உருவாக்கப் பட்டுள்ளது. அந்தவகை யில், இந்த செயலி   பயன் பாட்டுக்கு வரஇருப்ப தாகவும், தமிழ்நாடு காவல்துறையின்  http://eservices.tnpolice.gov.in/) என்ற இணையதள முகவரியில் இருந்து இந்த செயலிக் கான இணைப்பை பயன்படுத் திக் கொள்ளலாம் என வும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. 

இந்த செயலியில் புகார்தாரர், மனுவின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள் ளது. மேலும், புகார் மனுக்கள் தொடர்பான அறிக்கைகளை இச் செயலி மூலம் தேதி வாரி யாகவும், நாடு வாரியாக வும், புகாரின் வகை வாரியாகவும் புகார் மனுக்கள் மீதான நிலைமை வாரியாகவும் பல்வேறு அறிக்கைகளாக பெற்றுக் கொள்ளவும் வழி வகை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment