20.8.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉செப்டம்பர் மாதம் தெலங்கானா ஷாத் நகரில் நடைபெற உள்ள பிசி கர்ஜனா - பிற்படுத்தப்பட்டோர் முழக்கம் மாநாட்டில் கருநாடக முதலமைச்சர் சித்த ராமைய்யா கலந்து கொள்வார் என காங்கிரஸ் மேனாள் எம்.பி. அனுமந்தராவ் அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉தொழில் வளர்ச்சியில் சமூக நீதி முக்கியம் என ‘‘தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேசன் மிஷன்’’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காத சூழலில், மோடி அரசின் தெளிவற்ற நிலைப் பாடு, பொதுத் தேர்தலில் அக்கட்சிக்கு பீகார் மாநிலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
👉 அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்கள், மற்றும் நகரங்களில் மக்களுக்கு மலிவு விலையில் விமானப் பயணத்தை வழங்குவதற்கும் மோடி அரசால் தொடங்கப் பட்ட ‘உடான்’ திட்டம் 93 சதவீத வழித்தடங்களில் தொடங்கப்பட வில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
👉மோடி அரசின் முக்கிய நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை மோடி அரசு நியமித்து வருகிறது என ராகுல் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை, ஹிந் தியை திணிப்பதற்கான சதி என கருநாடகா தொடக்கக் கல்வி அமைச்சர் மது பங்காரப்பா பேச்சு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment