ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) முதல் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதையடுத்து, எந்த நியாய விலைக் கடையிலும் பொருள்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் மகளி ருக்கு ஆயிரம் ரூபாய் உரி மைத் தொகை வழங்கும் திட்டம் வரும் செப். 15-ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை நியாய விலைக் கடைப் பணியாளர்கள் வீடு வீடாக விநி யோகம் செய்தனர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், முகாம்களுக்கு விண்ணப்பதாரர்கள் வர வேண்டிய தேதி, நேரம் ஆகிய விவரங்கள்அடங்கிய டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. முகாம்களில் விண்ணப்பங்களை பெறும் பணி கடந்த ஜூலை 24-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் நியாய விலைக் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் அடிப்படையில் செயல் படுத்தப்படவுள்ளது. அதன்படி, பயோமெட்ரிக் கருவிகளில் விண்ணப் பதாரர்கள் தங்களது கை விரலைப் பதிந்தவுடன் அவர்கள் குறித்த விவரங் கள் முகாமில் உள்ள தன்னார்வலர்களின் கையடக்கக் கணினியில் பெறப்படும். இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற் பட்ட நியாய விலைக் கடைகளின் பயோமெட் ரிக் கருவிகள் இந்த முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த கருவிகளைக் கொண்டு, மகளிர் உரிமைத் தொகைக் கான விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் மேற் கொள்ளப்பட்டு வரு கின்றன.
பொருள்கள் பெற முடியாத நிலை
நியாயவிலைக் கடைகளில் பயோ மெட்ரிக் கருவிகள் இல்லாததால், பதிவேட்டில் கையொப் பமிட்டு குடும்ப அட் டைதாரர்கள் பொருள் களை வாங்கி வருகின்றனர். பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் இருக்கும்பட்சத்தில், எந்தக் கடையில் வேண்டு மானாலும் பொருள்களைப் பெற்றுக் கொள் ளலாம். நியாய விலைக் கடைகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பயோ மெட்ரிக் கருவிகள் இல்லாததால், குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு மட்டுமே சென்று பொருட்களை வாங்கும் நிலை இருந்து வந்தது.
மகளிர் உரிமை தொகைத் திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவு முகாம்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பயோ மெட்ரிக் கருவிகள், 6.8.2023 அன்று நியாய விலைக் கடைகளுக்கு மீண்டும் எடுத்துச் செல் லப்படவுள்ளன.
இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
விண்ணப்பப் பதிவு தொடங்கிய காலத்தில், நியாய விலைக் கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவிகளின் தேவை இருந்தது. இப்போது, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை சார் பில் பயோமெட்ரிக் கருவிகள் தனியாக கொள் முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வேளாண்மை போன்ற சில துறைகளி லும் பயோமெட்ரிக் கருவிகள் கையிருப்பில் உள் ளன. இந்தக் கருவிகள் இப்போது பயன்பாட்டுக் குக் கொண்டு வரப்பட்டதால், நியாய விலைக் கடைகளின் பயோமெட் ரிக் கருவிகளின் தேவை இனி இருக்காது.
எனவே, முதல் கட்ட விண்ணப்பப் பதிவுக்கு மட்டுமே நியாய விலைக் கடைகளின் பயோ மெட்ரிக் கருவிகளின் தேவை இருக்கும். அடுத்தடுத்த கட்டங்களுக்கான விண்ணப்பப் பதிவுக்கு தேவைப்படாது என்பதால் அவை அனைத்தும் 6.8.2023 முதல் நியாய விலைக் கடைகளுக்கே கொண்டு செல்லப்படவுள்ளன என்றனர்.
No comments:
Post a Comment