மும்பை, ஆக.27- மும்பையில் நடக்க உள்ள 'இண்டியா' கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இண்டியா கூட்ட ணியின் 3ஆவது கூட்டம் ஆக.31, செப்.1ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்ள உள்ளன.
இந்த கூட்டத்தின் பல்வேறு அம்சங்களைத் திட்டமிடுவதற்காக சிவசேனா (உத்தவ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி பல குழுக்களை அமைத்துள்ளது. ஊடகங்கள், சமூக ஊடகங்கள், தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மூன்று கட்சிகளிலிருந்தும் தலா இரண்டு தலைவர்கள் அடங்கிய குழுக்கள் கவனித்துக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் மற்றும் விளம்பரங்களை காங்கிரஸ் கையாளும் என்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சி போக்குவரத்தை கவனித்துக்கொள்ளும் என்றும், சிவசேனா தங்குமிடத்தை கவனித்துக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் ஹயாட் விடுதியில் இதற்காக 200க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 நாள் கூட்டமும் இங்குதான் நடைபெற உள்ளன. இந்தபணிகளை காங்கிரஸ் தலைவர்கள் மிலிந்த் தியோரா, நசீம் கான் மற்றும் வர்ஷா கெய்க்வாட் ஆகியோர் மேற்பார்வையிடுவார்கள். அதே நேரத்தில் மகாராட்டிர மேனாள் முதலமைச்சர் அசோக் சவான் ஏற்பாட்டுக் குழுவின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் தொடர்பான விவரங்கள் ஆகஸ்ட் 30 அன்று அறிவிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment