பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலைப்போட்டிகளின் துவக்கவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலைப்போட்டிகளின் துவக்கவிழா

திருச்சி, ஆக. 12 - திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலைப் போட்டிகளின் துவக்க விழா 10.08.2023 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரையாற்றினார். முதல்வர் முனைவர் இரா. செந் தாமரை தமது தலைமையுரையில் பெரியாரின் மேடை என்பது அனைவருக்குமான வாய்ப்புகளை கொடுக்கும் சமத்துவ மேடை. இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 90 வயதில் 80 ஆண்டுகள் பொதுவாழ்வு கண்ட நமது நிறு வனத் தலைவர் ஆசிரியர் இந்த வயதிலும் எழுத்துப்பணி, இயக்கப் பணி, கல்விப்பணி என சமுதாயத் திற்காக பாடுபட்டு வருகிறார்கள். ஆசிரியர் அவர்களுடைய சமு தாயப் பணிக்காக தமிழ்நாடு அரசு "தகைசால் தமிழர்" விருது வழங்கயி ருப்பது உலகத் தமிழர்கள் அனை வருக்குமான மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஆசிரியர் அவர்களை இளைய சமுதாயத்தினர் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 

பகுத்தறிவுச் சிந்தனைகள்...

துவக்கவிழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் எம். செண் பகவள்ளி தமது சிறப்புரையில் கலைப்போட்டிகளின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள் வதில் பெருமகிழ்ச்சியடைவதாக வும் விளையாட்டுப்போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கெ டுத்திருப்பது பாராட்டிற்குரியது என்றும் உரையாற்றினார். மேலும் கலைகளின் மூலம் பகுத்தறிவுச் சிந்தனைகளை மக்கள் மத்தியில் நிலைநிறுத்தியவர்கள்தான் அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறி ஞர் கலைஞர் என்றும் பேரறிஞூர் அண்ணா எழுதிய வேலைக்காரி என்ற பகுத்தறிவு நாடகத்திற்கு தலைமை தாங்கியவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் என்றும் உரையாற்றினார்.  பகுத்தறிவுச் சிந்தனைகளை விதைத்த பெரியார் பெயர் தாங்கிய, நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறக் கூடிய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அனைத்து செயல்பாடுகளிலும் பகுத்தறிவு சிந்தனையோடு செயல்பட வேண் டும் என்றும் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழினாலும் மக்களி டத்தில் சுயமரியாதை எடுத்துச் சென்றவர் முத்தமிழ் அறிஞர் கலை ஞர் என்றும் உரையாற்றினார். 

பயிற்சி - முயற்சி

கலை ஆர்வம் மிக்க பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்தான் நடிப்புத்துறையில் சிறந்து விளங்கிய சிவாஜி கணேசன் அவர்களுக்கு சிவாஜி என்ற பெயரை சூட்டினார் என்ற வர லாற்று நிகழ்வுகளை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். 

மேலும் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்கள் பயிற்சி, முயற்சி என்ற இரண்டையும் இரு கண்களாக பாவித்து கிடைக்கக் கூடிய வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி அனைத்து கலைப்போட்டிகளிலும் வெற்றிய டைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.    

பேச்சு - ஓவியப் போட்டிகள்

துவக்கவிழா நிகழ்ச்சியின் நிறைவாக கலைவிழா போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரி யர் வி.கவிதா நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அதனைத்தொடர்ந்து தேவைப்படு கிறார் பெரியார் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, திராவிட தமி ழினத்தின் வழிகாட்டி - டாக்டர் கி. வீரமணி என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி, வெல்லட்டும் திராவிடம் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி, இந்தியா 77 என்ற தலைப்பில் கோலப்போட்டி, சமூகநீதி என்ற தலைப்பில் ஓவியப் போட்டி, மருந்தியல் தொடர்பான பல தலைப்புகளில் ஆங்கிலப் பேச் சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நடனம், நாட்டியம், நாடகம், பாடல் மற்றும் பல திறன்களை வளர்க்கும் கலைப்போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தைச் சார்ந்த நடராஜன், பெரியார் பெருந்தொண்டர்கள், பேராசிரி யர்கள் மற்றும் மாணவர்கள் திர ளாக கலந்து கொண்டு சிறப்பித் தனர். 

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு இனிவரும் உலகம் புத்தகத்திற்காக நடராஜன் ரூ.500- நன்கொடை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment