தமிழ்நாடு முழுவதும் பட்டினி அறப்போராட்டம் வெற்றி!
‘இண்டியா’ கூட்டணி வெற்றிபெற்றால்
‘நீட்’ தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது!
சென்னை, ஆக.21- 'இண்டியா' ‘‘I.N.D.I.A. - கூட்டணி வெற்றி பெற்றால், ‘நீட்’ தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது! இதனைத் தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம்!’’ என்று, கழகத் தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட் டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு வருமாறு :-
நீட் தேர்வு ரத்து போராட்டம் என்பது தி.மு.க.வின் போராட்டமோ, அரசியல் கோரிக்கையோ அல்ல! சமூகச் சமத்துவக் கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை! ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை!
தமிழ்நாடு முழுவதும் பட்டினி அறப்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. கலந்து கொண்ட அனைவர்க்கும் வாழ்த்துகள்!
‘‘I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு (NEET)
நிச்சயம் தமிழ்நாட் டில் இருக்காது. இதனைத் தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம்.
-இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment