குழந்தைகளுக்கு கழுதை, மாட்டுப் பால், தேன் கொடுக்கக் கூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

குழந்தைகளுக்கு கழுதை, மாட்டுப் பால், தேன் கொடுக்கக் கூடாது

வேலூர், ஆக. 5- வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் குழந்தைகள் நல பிரிவு சார்பில் "உலக தாய்ப்பால் வார தின விழா" ஒரு வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தாய்ப்பால் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாப்பாத்தி தலைமை தாங்கினார்.  

சென்னை குழந்தைகள் நல மருத்து வக் கல்லூரி பேராசிரியர் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நிபுணர் அனிதா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதா வது:- குழந்தை பிறந்த ஒரு மணி நேரத் தில் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்க வேண்டும். கட்டாயம் 6 மாதத்திற்கு தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.  

மாட்டுப் பால், பால் பவுடர், தேன், சர்க்கரை தண்ணீர், கழுதைப் பால் போன் றவை கொடுக்க கூடாது. தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது ‘கங்காரு’ அரவணைப்பு போன்று பால் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை பால் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கி யமாக வளரும். இவ்வாறு அவர் கூறினார்.  

No comments:

Post a Comment