சென்னை,ஆக.8 - தமிழ்நாட்டு மீன வர்களை இலங்கைக்கடற்படையினர் தாக்கி விரட்டுவதும், கைது செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு அண்மை யில் கடிதம் மூலம் வலியுறுத்தினார். இந் நிலையில், தற்பொழுது, இலங்கை கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ் நாட்டை சேர்ந்த 9 மீனவர்கள் விடுவிக்கப் பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து கடந்த மாதம் 25-ஆம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் 9 பேரை கைது செய்தனர். அவர்களை விடுவிக்க நட வடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் இன்று (8.8.2023) காலை 9 மீனவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 9 மீனவர்களையும் தமிழ்நாடு அனுப்புவ தற்கான பணிகளை அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment