ஜோதிட பித்தலாட்டம்: திருட்டுக்கு நேரம் குறித்துக் கொடுத்த ஜோதிடர் ரூபாய் 95 லட்சம் கொள்ளை - ஜோதிடர் சிக்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

ஜோதிட பித்தலாட்டம்: திருட்டுக்கு நேரம் குறித்துக் கொடுத்த ஜோதிடர் ரூபாய் 95 லட்சம் கொள்ளை - ஜோதிடர் சிக்கினார்

புனே, ஆக. 23- திருட்டுக்கு நேரம் குறித்து கொடுத்த ஜோதிடரின் ஆலோசனைபடி வீடு புகுந்து ரூ.1 கோடியே 6 லட்சம் நகை, பணம் கொள்ளை அடித்த கும்பலை சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு நல்ல நேரம் குறித்து கொடுத்த ஜோதிடரும் சிக்கினார்.

புனே மாவட்டம் பராமதியை சேர்ந்தவர் சாகர் கோப்னே. இவர் சம்பவத்தன்று வேலை விவரமாக வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி தனியாக இருந் தார். அப்போது திடீரென வீட்டில் புகுந்த 5 பேர் கும்பல் மனைவியை கயிற்றால் கட்டி போட்டனர். சத்தம் போடாமல் இருக்க வாயை துணியால் கட்டினர். பின்னர் வீட்டில் இருந்த ரூ.95 லட்சம் ரொக்கம், ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண் ஒரு வழியாக கட்டை அவிழ்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத் தார். உடனே காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத் தினர்.

இதில் கொள்ளை அடித்துச் சென்ற 5 பேரின் அடையாளம் தெரியவந்தது. சச்சின் ஜக்தானே, ராய்பா சவான், ரவீந்திர போசலே, துரியோதன், நிதின் மோரே என தெரியவந்தது. இவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.76 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை பறி முதல் செய்தனர்.

கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் காவல்துறையின ருக்கு அதிர்ச்சி கலந்த சுவாரசிய தகவல் கிடைத்தது. வீடு புகுந்து கொள்ளையடிக்க சுப நேரத்தை ஜோதிடர் ஒருவர் குறித்து கொடுத் ததும், அந்த ஜோதிடர் பெயர் ராம் சந்திரா சாவ்லா என்றும் காவல் துறையினரிடம் அவர்கள் கூறினர். 

இதையடுத்து கொள்ளையர் களுக்கு நல்ல நேரம் குறித்து கொடுத்த ஜோதிடரை காவல் துறையினர் பொறிவைத்து கைது செய்தனர். அதன் பின்னரே தனக்கு நேரம் சரியில்லை என்பதை ஜோதிடர் உணர்ந்தார். தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

No comments:

Post a Comment